தோல்வி பயம் காரணமாக ஊர் ஊராக வலம் வரும் முதலமைச்சர் - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தோல்வி பயம் காரணமாக முதலமைச்சர் ஊர் ஊராக வலம் வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் தங்களது நோக்கம் என்றார். தற்போது தேர்தல் வருவதையொட்டி தோல்வி பயம் காரணமாக முதலமைச்சர் ஊர் ஊராக உங்களுடன் ஸ்டானின் என்ற விளம்பர திட்டத்தை தொடங்கி வைத்து நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டினர். மேலும், பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது மூலமாக பொருளாதாரம் உயர்ந்து உள்ளதாக கூறி வரும் முதலமைச்சருக்கு தமிழகத்தில் பால் மற்றும் சீனியின் விலை என்ன என்று தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

Night
Day