2வது நாளாக குப்பைக் கிடங்கில் தொடர்ந்து எரியும் தீ..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் 2வது நாளாக தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
 
இந்த குப்பை கிடங்கியில் நாள்தோறும் சுமார் 200 டன் குப்பைகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. இந்நிலையில், குப்பை கிடங்கில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததன் காரணமாக குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவியது. குப்பை கிடங்கில் இருந்து வெளியேறி வரும் கரும்புகையானது அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட உபாதைகளை சந்தித்து வருகின்றனர். இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்து 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், நேற்று மாலையில் இருந்து 16 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். தீ விபத்து காரணமாக ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அவ்வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் நேற்று மாலை முதல் திருப்பி விடப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக வாகனஓட்டிகள் தெரிவிக்கின்றனர். 

Night
Day