இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
டெல்லி, குஜராத், ஹரியானா, கோவா மற்றும் சண்டிகரில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளிடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 4 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி கட்சி ஒரு தொகுதியிலும் களமிறங்குகின்றன. குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில், பாவ் நகர் மற்றும் பாரூச் ஆகிய இரு தொகுதிகளில் ஆம்ஆத்மியும், மீதமுள்ள 24 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரிலும், கோவாவிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. பஞ்சாபில் இருக்கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடும் என டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...