ஐ.நா. கூட்டத்தை பிரதமர் மோடி புறக்கணிக்க முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நியூயார்க்கில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வில் உயர்மட்ட பொது விவாதம் வரும் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் பேச்சாளர்களின் தற்காலிக பட்டியலில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இருவரும் இருந்தனர். இந்தியா- அமெரிக்கா இடையே வரி விதிப்பு பிரச்னை இருந்து வரும் நிலையில், ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துவார் என்று தெரிகிறது. 

varient
Night
Day