துணிச்சலான முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி - பாதுகாப்பு அமைச்சர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியின் தலைமையில், இந்திய அரசு, அனைத்து துறைகளிலும் நிவாரணம் அளிக்கும் வகையில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. பல முக்கியமான பொருட்களின் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், இந்த சீர்திருத்தம் வாழ்க்கை முறையை எளிதாக்கும், வணிகம் செய்வதை எளிதாக்கும், சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில், அத்தியாவசியப் பொருட்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் திருத்தப்பட்ட அடுக்குகளுடன் கூடிய ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். ஏழைகளுக்கு ஆதரவான, வளர்ச்சி சார்ந்த இந்த முடிவு, விவசாயிகள் முதல் வணிகங்கள் வரை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

Night
Day