தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை எழும்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பணி நிரந்தரம் செய்யக்கோரி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் விளம்பர திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்த உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி, 86வது நாளாக பணியில்லாமல் தூய்மை பணியாளர்கள் போராடி வருவதாக தெரிவித்தார். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு கொடுத்த பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். 25க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் தங்கள் மீது போடப்பட்டுள்ளதாகவும், நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் பாரதி உறுதிபடத் தெரிவித்தார்.

Night
Day