முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை - பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில் முன்விரோதம் காரணமாக 19 வயது இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞர் தண்ணீர் கேன் விநியோகம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஆனந்த் தனது நண்பர் ஒருவருடன் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள தேநீர் கடைக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல், ஆனந்தை  அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்த், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து ஆனந்த சடலத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டவுன் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சக்தி என்பவர் கொலை முயற்சியில் ஆனந்த் முக்கிய குற்றவாளியாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் ஆனந்தை கொலை செய்தததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பள்ளி மாணவர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் ஒருவரை தேடி வருகின்றனர்.

Night
Day