சென்னையில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டி - கூடுதல் காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேளச்சேரியில் 50வது மாநில துப்பாக்கிச்சூடுதல் போட்டியை கூடுதல் காவல் ஆணையாளர் பிரவேஷ் குமார் தொடங்கி வைத்தார். 

குருநானக் கல்லூரியில் இன்று முதல் 9ம் தேதி வரை பிஸ்டலுக்கான போட்டியும், 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை ரய்ஃபில் சுடும் போட்டியும் நடைபெறுகிறது. போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுதல் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், தகுதி பெறும் வீரர்கள் அடுத்து சுற்றான தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை பெறுவார்கள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துப்பாக்கிச்சூடுதல் சங்கத் தலைவர் டி.வி சீதாராம ராவ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Night
Day