மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். மும்பை போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்அப் உதவி எண்ணிற்கு லஷ்கர்-இ-ஜிஹாதி என்று குறிப்பிடப்பட்டு அந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதில், 14 பயங்கரவாதிகள் 34 வாகனங்களில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் உடன் மும்பையில் ஊடுருவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 10 நாள் விநாயகர் சதுர்த்தி விழா இன்று  முடிவடையவுள்ள நிலையில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டலை அடுத்து, மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மிரட்டல் தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த 51 வயதான அஸ்வினி குமார் என்ற ஜோதிடரை மும்பை போலீசார் கைது செய்தனர். தனது நண்பரை சிக்க வைப்பதற்காக அவர் இந்த மிரட்டலை விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். 

varient
Night
Day