தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவாக இருந்த விஜயதரணி கட்சியில் இருந்து விலகி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாகவும், சட்டமன்ற காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தவர் விஜயதரணி. காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜயதரணி போட்டியிட முயற்சித்தார். ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு அந்த இடம் வழங்கப்பட்டது. இதனால் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்ததாக தகவல் வெளியாகி வந்தது. இதனிடையே டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த விஜயதரணி இன்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதனையடுத்து, பாஜகவில் இணைந்த விஜயதரணியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி மேலிட பொறுப்பாளர் அஜய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...