ஒன்றுபடுவோம்...! வென்று காட்டுவோம்...!

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மா சூளுரைத்தது போல் இன்னும் 100 ஆண்டுகள் மக்களுக்காகவே கழகம் இயங்கும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் அவர்கள் நிரூபித்து இருக்கிறார் என தெரிவித்துள்ளார். பல்வேறு நெருக்கடியான கால கட்டங்களிலும் திரு.செங்கோட்டையன் அவர்கள் உடனிருந்தவர் - தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் ரத்தம் தான் என்பதை திரு.செங்கோட்டையன் அவர்கள் நிரூபித்துள்ளார் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற திரு.செங்கோட்டையன் கருத்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து என்றும் தமிழக மக்களின் கருத்தும் இது தான் என்றும் தானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் திரு.செங்கோட்டையன் அவர்களைப் போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும்வரை திமுக என்ற தீயசக்தி எந்த விதித்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது- திமுகவின் சதித்திட்டத்தை முறியடித்திட கழக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்- இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது- இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது-  எனவே திமுக என்ற தீயசக்தி நம் கழகம் ஒன்றுபட எப்படியெல்லாம் தடைபோட்டு தடுத்தாலும் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கழகம் மீண்டும் அதே மிடுக்கோடும் செறுக்கோடும் மிளரும் என்று புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட வலிமை மிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்து கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day