இந்தியா
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
ராஷ்டிரிய ஜனதா தளத்தலைவர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு பாட்னாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, 'குஜராத்தியர்கள் மட்டுமே ஏமாற்றுக்காரர்கள்' என சர்ச்சைக்குரிய வகையில் தேஜஸ்வி யாதவ் பேசியிருந்தார். இதுகுறித்து அகமகதாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டுமென தேஜஸ்வி யாதவ், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து அகமதாபாத் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து தனது கருத்தை திரும்ப பெறுவதாக தேஜஸ்வி யாதவ் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆந்திர பேருந்து விபத்து - புதிய சிசிடிவி காட்சி ஆந்திராவில் பேருந்து வி?...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...