ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மக்களவைத் தேர்தலுக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை வழி அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4-ம் தேதி மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என அவர் தெரிவித்துள்ளார். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி கூறுவதாகவும், ஆனால் பாஜக 200 இடங்களில் கூட வெற்றி பெறாது எனவும் கார்கே கூறினார். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காக்கும் முக்கியமான தேர்தலாக இது உள்ளதாகவும் கார்கே கூறியுள்ளார். 

Night
Day