ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு & காஷ்மீர் சோன்மார்க்கில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு சென்றுவிட்டதால் அங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோன்மார்க்கில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வீடுகள், சாலைகள் மட்டுமின்றி மரம், செடி, கொடிகள் அனைத்திலும் வெண்பனி படர்ந்து காட்சியளிக்கிறது. மோசமான பனிப்பொழிவின் காரணமாக வெளியே வர முடியாமல், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

Night
Day