கேரளா: சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்தது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தவர்களின் இரு சக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொட்டாரக்கரையில் இருந்து மூணாறுக்கு இரு சக்கர வாகனத்தில் இருவர் சுற்றுலா வந்தனர். மூணாறு மெயின் பஜார் வழியாக வந்தபோது வாகனத்தின் எஞ்சினில் தீ பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து இருவரும் இருசக்கர வாகனத்தை உடனடியாக நிறுத்திவிட்டு, அருகில் இருந்த டீ கடைகளில் இருந்து தண்ணீர் வாங்கி பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.

varient
Night
Day