தமிழகம்
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதி
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வரவணை சாலையில் இருசக்கர வாகனம் மீது ஈச்சர் வாகனம் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்தார். காணியாளம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் திருச்சி வீரப்பூர் பகுதியை சேர்ந்த செபாஸ்டியன் சுபாஷ், மணப்பாறை உடையாப்பட்டியை சேர்ந்த ஜான்சன் மற்றும் கரூர் கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த அருண்ஜெஸ்டின் ஆகிய மூன்று பேர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தரகம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தபோது வரவணை பகுதியில் எதிரே வந்த ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் செபாஸ்டியன் சுபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த அருண்ஜெஸ்டின், ஜான்சன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஜான்சன் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வாகன ஓட்டுநர் சரவணன் மீது சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...