கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திரா மாநிலம் கடப்பா - ராயச்சோட்டி சாலையில் உள்ள மலைப்பாதையில் லாரியை கார் முந்த முயன்றபோது நேரிட்ட விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.

கடப்பா பர்த்வேல் நகரை சேர்ந்த 5 பேர் கோயில் திருவிழாவுக்காக பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கூவுல செருவு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த லாரியை கார் முந்த முயன்ற போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்

Night
Day