கன்னடத்தில் பேச மறுத்த எஸ்.பி.ஐ வங்கி மேலாளர் பணியிட மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கர்நாடகாவில் கன்னடத்தில் பேச மறுத்து வாடிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியரின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சூர்யா நகரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளையில் இந்தி மொழியில் பேசிய பெண் மேலாளரிடம் கன்னடத்தில் பேசும்படி வாடிக்கையாளர் கூறியதாக தெரிகிறது. தான் ஒருபோதும் கன்னடத்தில் பேச மாட்டேன் எனவும், கன்னடத்தில் பேச வேண்டும் என்று ஏதேனும் விதி உள்ளதா எனவும் பெண் மேலாளர் வாக்குவாதம் செய்தார். இதற்கு மன்னிப்பு கோரி உள்ள எஸ்பிஐ, வங்கி மேலாளரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதுகுறித்த காட்சிகள் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வங்கி முன்பாக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

Night
Day