உ.பி.: இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்திரபிரேதச மாநிலத்தில் ஹோலி பண்டிகையின்போது, முகத்தில் கலர் பொடியை பூசிக்கொண்டு இளம்பெண்ணுடன் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். வடஇந்தியா உட்பட பல்வேறு இடங்களில் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒருவர் மீது ஒருவர் வண்ண கலர் பொடிகளை தூவியும், முகத்தில் பூசிக்கொண்டும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில், நொய்டாவில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் நின்றுகொண்டு சாகசத்தில் ஈடுபட முயன்ற போது தடுமாறி கீழே விழுந்தார். ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளைஞருக்கு காவல்துறை அபராதம் விதித்தது. 

varient
Night
Day