இமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். அந்த மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாகவும், முதல்வர் சுக்விந்தர் சிங்கு சுகுவுக்கு எதிராகவும் இருப்பதாக தகவல் வெளியாகியது. இதனால் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் உண்மையில்லை என்று முதல்வர் சுக்விந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். மேலும், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Night
Day