சொந்த செலவில் சூனியம்..! விளம்பரத்தில் சீன ராக்கெட்... சீரியஸ் ஆன பிரதமர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவுக்கான பத்திரிக்கை விளம்பரத்தில் இந்தியக் கொடிக்குப் பதிலாக சீனக் கொடி பயன்படுத்தப்பட்டிருப்பது, பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுமென்றே இதுபோல் செய்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமானது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ளது. 2,233 ஏக்கரில் அமையும் இந்த ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்காக, விளம்பர திமுக அரசு கொடுத்த பத்திரிக்கை விளம்பரம் தான் தற்போது அரசியலில் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளது. மு.க.ஸ்டாலினையும் அவரது வாரிசுகளையும் கவர வேண்டும் என்பதற்காக திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த விளம்பரம், சொந்த செலவில் சூனியம் வைத்தது போல் ஆகி விட்டது. ராக்கெட் ஏவுதளத்திற்கான விளம்பரத்தில், பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, எவ.வேலு என புகைப்படங்கள் அணிவகுத்து வரிசை கட்டி நிற்க, ராக்கெட் புகைப்படத்தைப் பார்த்ததும் அனைவரும் வாயடைத்துப் போயினர். அடிக்கல் நாட்டு விழாவுக்கான விளம்பரத்தில் இந்திய ராக்கெட்டுக்குப் பதிலாக, சீன ராக்கெட்டின் புகைப்படம் இருந்தது தான் இதற்கு காரணம். மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய திட்டம் என வார்த்தைகளில் ஜாலம் நிகழ்த்திய அனிதா ராதாகிருஷ்ணன், வாரிசுகளின் புகைப்படங்களை எங்கே பொருத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி, ராக்கெட் விஷயத்தில் கோட்டை விட்டு விட்டதாக கூறப்படுகிறது. கூகுள் தேடலின் போது கிடைத்த ராக்கெட்டை ஏனோ தானோ என நினைத்துக் கொண்டு, செய்தித் தாளில் விளம்பரம் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளம்பர அரசின் விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது திமுகவைக் கண்டித்தார். இந்திய ராக்கெட்டுக்குப் பதில், சீன ராக்கெட்டை விளம்பரத்தில் பயன்படுத்தியதன் மூலம், திமுகவுக்கு நாட்டுப் பற்று துளியும் இல்லை என்பது அம்பலம் ஆகி இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

இதேபோல், தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மொத்தத்தில், தமிழ்நாட்டு மக்களால் விளம்பர அரசு என அழைக்கப்படும் திமுக அரசு, விளம்பரத்தைக் கூட சரியாகச் செய்ய முடியாத அரசு என்பது அம்பலம் ஆகி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். 

Night
Day