நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம்... தமிழகத்தின் மைல்கல் திட்டம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்... நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவது பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட், செயற்கைகோள்கள் மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு வருகிறது....

இந்நிலையில், சிறுகுறு மற்றும் நானோ என்ற வகையில் எடை குறைந்த எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தற்போது இஸ்ரோ தயாரித்து வருகிறது....

இந்த வகை ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்காக புதிய ஏவுதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது...

அந்த வகையில் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்ப சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது....

அறிவியல் ரீதியாக துருவ வட்டப் பாதையில் தான் செயற்கைக் கோள்கள் அதிக அளவில் செலுத்தப்படுகின்றன. அந்த வகையில் குலசேகரன்பட்டினத்தில் தெற்கு நோக்கி நிலப்பரப்பு இல்லாததால், ஏவுகனையை விண்ணில் செலுத்துவதற்கான சிறப்பான இடமாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகளால் முடிவெடுக்கப்பட்டது.

உலகளவில் பி.எஸ்.எல்.வி (PSLV) ஏவுகணை தான் பொருட் செலவில் சிக்கனமானது. அதை விட சிக்கனமானது, எஸ்.எஸ்.எல்.வி ஏவுகணை... பி.எஸ்.எல்.வி-யின் விலை 120 கோடி என்றால், எஸ்.எஸ்.எல்.வி 30 கோடி தான். அதிலும், குலசேகரன்பட்டினத்தில் இருந்து அனுப்பினால் இரண்டு செயற்கை கோள்களை அனுப்ப முடியும்....

ஸ்ரீஹரிகோட்டா சதுப்பு நிலமாக இருப்பதால் கவுண்டவுனுக்கு இரண்டு நாள்கள் எடுத்துகொள்ளப்படுகிறது...

குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளம் நவீன முறையில்  அமைக்கப்படுவதால், விண்ணில் செலுத்திய சுமார் 4 மணி முதல் 5மணி நேரத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு சென்று விடும்....

இதை எல்லாம் கருத்தில் கொண்டு நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கியது...

ஸ்ரீ ஹரிகோட்டாவில் அனைத்து கட்டுமானங்களும் இல்லாததால் திருவனந்தபுரம், மகேந்திரகிரி, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து பொருட்கள் வரவழைத்து, ஒருங்கினைத்து தான் ஏவுகனைகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ள 2ஆயிரத்து 233 ஏக்கர் நிலத்தில், எஸ்.எஸ்.எல்.வி-க்கு தேவையான அனைத்தும், தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து உருவாக்குவதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது...

தமிழக அரசு நிலம் ஒதுக்கியதை அடுத்து, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்...

குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளத்திற்கான திட்டப்பணிகள் முடிவடைந்தால், அறிவியல் ரீதியை விட வர்த்தக ரீதியிலும் சிறப்பாக செயல்படும் நிலை ஏற்படும்....

நாட்டின் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். நான்கு ஐந்து ஆண்டுகளில் நாள்தோறும் ஒரு செயற்கைக்கோள் அல்லது வாரத்திற்கு இரண்டு மூன்று செயற்கைக்கோள் அனுப்ப முடியும்...

அப்போது நம்முடைய கட்டுமானம் மிக மிக சிக்கனமானதாக அமையும். இதைப்போன்ற இடத்தை தான் அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க் தேடிக்கொண்டு இருக்கிறார்...

ஆனால் அவருக்கு கிடைக்காத இடம் நமது நாட்டில் அதுவும் தமிழகத்தில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்தவரை இது சிறந்த மைல்கல் திட்டம் என்று சொன்னால் அது மிகையல்ல...

Night
Day