விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பழங்களின் விலை உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மலர் சந்தைகளில் பூக்கள் விலை மற்றும் வாழை விலை அதிகரித்துள்ளது. 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள், காய்கறிகள், பழங்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை ஆயிரத்து 200 ரூபாய்க்கும், ஜாதிமல்லி ஆயிரம் ரூபாய்க்கும், சாமந்தி 240 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் தோரணம் 200 ரூபாய்க்கும், எருக்கு மாலை 100 ரூபாய்க்கும், அருகம்புல் கட்டு 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. 

varient
Night
Day