11ஆம் நூற்றாண்டின் கலியமர்த்தன கிருஷ்ணர் சிலை மீட்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான கலியமர்த்தன கிருஷ்ணர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டு வந்துள்ளனர். 

தாய்லாந்தை சேர்ந்த டக்லஸ் லாட்ச் ஃபோர்டு என்பவர், கலியமர்த்தன கிருஷ்ணர் சிலை விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனையறிந்த சிலைக்‍ கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், டக்‍லஸ் ஃபோர்டு, இந்தியா, தெற்கு ஆசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பழங்கால சிலைகளை வாங்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து சென்னையைச் சேர்ந்த சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் கலியமர்த்தன கிருஷ்ணர் சிலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை அமைப்பினரின் உதவியுடன் தற்போது இந்த சிலை தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கிருஷ்ணர் சிலையை மீட்ட அதிகாரிகளை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

Night
Day