தைப்பூச திருவிழா - பழனியில் குவியும் பக்தர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவில் மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஆறாம் நாள் திருவிழாவான இன்று பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

Night
Day