ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெறுகிறது. இதனையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்க ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படும் திருவாபரணம் சபரிமலை சந்நிதானத்தை இன்று மாலை வந்தடைகிறது. இதையடுத்து, சுவாமிக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் தெரியும். பக்தர்கள் மகர ஜோதியைக் காண சபரிமலையில் 10 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மகரஜோதி தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...