மாலத்தீவில் இந்திய ராணுவம் வரும் மார்ச் 15-க்குள் வெளியேற வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் திருப்ப பெற்றுக் கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே அரசு ரீதியிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து 5 நாட்கள் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியப் பெருங்கடல் பகுதி எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கும் சொந்தமானதல்ல என இந்தியாவை வெளிப்படையாகச் சாடினார். அதன் தொடர்ச்சியாக தற்போது மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவம் வெளியேறுவதற்கு காலக்கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day