பாகிஸ்தானில் 12 முட்டைகளின் விலை ரூ.400

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பாகிஸ்தானில் 12 முட்டைகளின் விலை 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல் கோழி ஒரு கிலோ 615 ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த விலையான 175 ரூபாய்க்குப் பதிலாக வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 230 முதல் 250 பாகிஸ்தான் ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் பெரும்பாலான பொருட்களின் விலை விண்ணைத் தொடும் வண்ணம் உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும், பதுக்கல் மற்றும் லாபம் ஈட்டுவதைத் தடுக்கவும் மாகாண அரசுகளுடன் தேசிய விலைக் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு அறிவுறுத்தியுள்ளது.

Night
Day