தமிழகத்திலிருந்து 200 பாகிஸ்தானியர் வெளியேறினர்- காவல்துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இருந்து 200 பாகிஸ்தானியர்கள் வெளியேறிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தங்கி இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்களை வெளியேற வேண்டும் என காவல்துறை அறிவுறுத்திய நிலையில், இதுவரை 200 பாகிஸ்தானியர்கள் வெளியேறிவிட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என்றும் தொழில் மற்றும் கல்வி ரீதியாக தங்கி இருக்கக்கூடியவர்கள் கணக்கெடுக்கும் பணி மற்றும் கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது. 

varient
Night
Day