ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் டோக்யோவில் இருந்து சென்டைக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்தார்.

2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து ஜப்பானில் உள்ள 16 மாகாணங்களின் கவர்னர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் பயணித்த புகைப்படங்களை பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதுபோல, ஜப்பான் பிரதமர் இஷிபா, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடியுடன் புல்லட் ரயிலில் சென்டைக்குப் புறப்பட்டதாகவும், ஒரே பெட்டியில் பயணித்ததாகவும் பதிவிட்டுள்ளார். 

புல்லட் ரயிலில் சென்டை நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உள்ளூர்வாசிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்த சிலர் 'மோடி சான் வெல்கம்' என்று முழக்கமிட்டு வரவேற்றனர். தொடர்ந்து ஜப்பான் ரயில்வேயில், பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் சென்டை நகருக்கு சென்றடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள டோக்கியோ எலக்ட்ரான் லிமிடெட் தொழிற்சாலையை பார்வையிட்டார். அங்குள்ள, பயிற்சி அறை, உற்பத்தி கண்டுபிடிப்பு ஆய்வகம் ஆகியவற்றிற்கு சென்ற பிரதமர் மோடி, நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

Night
Day