எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்தியாவும் சீனாவும் இணைந்து பணியாற்றுவது முக்கியம் என்றும், சீனாவுடனான இருதரப்பு உறவுகள் சீரடைந்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டோக்கியோ சென்றுள்ள பிரதமர், ஜப்பானிய செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், தற்போது நிலவும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியாவும் சீனாவும் உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்று பிரதமர் கூறினார். சீனாவுடன் உறவுகள் சீரடைந்து வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ரஷ்யாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பின் இருதரப்பு உறவுகளில் நிலையான மற்றும் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலையான, இணக்கமான இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.