இந்தியா - ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒப்பந்தங்கள் கையெழுத்தானதை தொடர்ந்து பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து இந்தியாவில் 10 டிரில்லியன் யென் அதாவது 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இரு நாடுகளின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், சந்திரயான்-5 திட்டத்திற்கு இஸ்ரோ மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஜாக்சா இணைந்து செயல்படும் என அறிவித்தார். உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்ற வகையில், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு இரு நாடுகளின் பங்களிப்பு அவசியம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Night
Day