7 ஆண்டுகளக்குப் பிறகு சீனா சென்றார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு 7 ஆண்டுகளுக்கு பின் சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

4 நாட்கள் அரசு முறை பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியா சென்றார். அங்கு இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஜப்பானில் உள்ள  16 மாகாணங்களின் ஆளுநர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பின்னர் 2 நாட்கள் ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி சீனா சென்றார். 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றதால் தியான்ஜின் விமான நிலையம் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு சீன பாரம்பரிய நடனத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

விமான நிலைய வரவேற்பைத் தொடர்ந்து, தியான்ஜினில் தங்கவுள்ள ஹோட்டலுக்கு வந்த பிரதமர் மோடியை, அங்கு திரண்டிருந்த இந்திய வம்சாவளியினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம் என முழக்கங்கள் எழுப்பி பிரதமர் மோடியை அவர்கள் வரவேற்றனர். இந்திய வம்வாவளியினருடன் கைகுலுக்கி பிரதமர் மோடி மகிழ்ச்சியைப் பகிரிந்து கொண்டார். 

இதனைதொடர்ந்து இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். பல ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரத நாட்டியம் உள்ளிட்ட நடனத்தைக் கற்றுவரும் சீன நாட்டைச் சேர்ந்தவர்களின் இசை மற்றும் நடனங்களை கண்டு ரசித்து பிரதமர் மோடி பாராட்டினார்.


Night
Day