தமிழகம்
கழக நிர்வாகி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்...
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இன்று இரண்டாவது நாளாக கடல் 100 அடி தூரம் உள்வாங்கியது. திருச்செந்தூரில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் கடல் உள்வாங்குவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று அமாவாசை என்பதால் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் உள்வாங்கி காணப்பட்டது. நாழிக்கிணறு முதல் அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு 60 அடி வரை உள்வாங்கி காணப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக 100 அடிக்கு மேல் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிவதுடன், பாறை இடுக்குகளில் அபூர்வ வகை மீன்களும் காணப்படுகிறது. கடல் சீற்றமின்றி அமைதியாக காணப்படுவதால் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் நீராடி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல?...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...