கழக நிர்வாகி இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஸ்ரீபெரும்புதூர் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மொளச்சூர் பெருமாள் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக நிர்வாகியுமான மொளச்சூர் இரா.பெருமாளின் மகன் பெ.அரவிந்த் மற்றும் மணமகள் கே.சர்மிளாவின் திருமணம் மொளச்சூரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மொளச்சூரில் உள்ள அம்மா திடலில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக அம்மா திடலுக்கு வருகை தந்த புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்து எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். மேலும், மணமக்கள் குடும்பத்தினர் பூங்கொத்துகள் கொடுத்து புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர்.

தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு புரட்சித்தாய் சின்னம்மாவுடன் மணமக்களும் வருகை தந்தனர். மணமக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா வரவேற்பு மாலை எடுத்துக் கொடுக்க, அவரது முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு ஆசி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மாவுடன் மணமக்களும் அவர்களது குடும்பத்தினரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது மணமக்களின் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ரோஜா மலர் கொடுத்து மகிழ்ந்தனர். குழந்தைகள் அன்புடன் அளித்த ரோஜா மலரை தாயுள்ளத்துடன் பெற்றுக்கொண்ட புரட்சித்தாய் சின்னம்மா, அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். 

இந்த திருமண வரவேற்பு விழாவில் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




Night
Day