புரட்சித்தாய் சின்னம்மா மே தின வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், உடல் உழைப்பின் அத்தியாவசியத்தையும்; அதன் மேன்மை மிக்க சிறப்பினையும் உலகத்தோர்க்கு உணர்த்துகின்ற திருநாளாக 'மே தின' திருநாள், நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் உரித்தான நாளாகவும் கொண்டாடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

உடலினை இயந்திரமாக்கி, உதிரத்தை வியர்வையாக சிந்தி, மனித நாகரீகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய தொழிலாளர்கள், எட்டு மணி நேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே 'தொழிலாளர் தினமாக' உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., "உழைப்பவரே உயர்ந்தவர்" என்றுதான் எழுதி கையெழுத்து போடுவார் - அதற்கு மிக முக்கிய காரணம் அவர் உழைப்பின் வலிமையை அறிந்தவர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 
திரைப்படத்துறையில் நடித்த போதே  உழைக்கும் வர்க்கத்தின் பெருமைகளை எடுத்து சொல்லும் விதமாக புரட்சித்தலைவர் தான் நடித்த படங்களில் உள்ள பாடல்கள், கதாபாத்திரங்கள் மூலம் உழைப்பவர்களின் பெருமைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்த்தவர் என புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

அதேபோன்று உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு இல்லை; 
உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே என்பதை புரட்சித் தலைவர், "ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும், ஒருவர் பெற்ற மக்களே!" என்ற பாடலின் மூலம் உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின் பெருமையையும் வெளிப்படுத்தியவர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

மேலும், உழைப்பாளர்களின் வலிகளையும், வேதனைகளையும் விளக்கும் வகையில் 'தொழிலாளி' என்ற திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ஒரு தொழிலாளியாகவே வாழ்ந்து காட்டியிருப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

புரட்சித்தலைவர் திரைப்படங்களில் பாடியதோடு, நடித்ததோடு இருந்துவிடாமல் தமிழக முதல்வராக பதவியில் அமர்ந்தவுடன், உழைப்பாளர்கள் மேன்மை அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி அவர்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றினார் என புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்‍காட்டியுள்ளார்.

அதிலும் குறிப்பாக, 1984ஆம் ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களது வாரிசுகளின் நலனைக் கருத்தில் கொண்டு ஈரோட்டில் சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி புரட்சித்தலைவரால் நிறுவப்பட்டதையும், 

அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களால் 1992-ஆம் ஆண்டு ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டதையும் இந்நன்னாளில் பெருமிதத்துடன் எண்ணிப்பார்ப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மேலும், நம் அம்மாவும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியதையும், உழைக்கும் வர்க்கத்தினர் என்றென்றும் நினைவில் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

உழைப்பின் மேன்மையை உள்ளத்தில் பதிய வைத்து, தங்களது கடினமான உழைப்பால் வீட்டையும் நாட்டையும் உயர்த்திடும் தொழிலாளர்கள் மற்றும் பசிக்‍கு உணவளிக்‍கும் விவசாய பெருங்குடி தொழிலாளர்கள் என அனைவருக்கும் தமது நெஞ்சார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day