அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை ஒட்டி சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வழக்‍கத்தை விட 4 மணி நேரத்துக்‍கு முன்பே தங்க நகை கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 8 ஆயிரத்து 980 இன்று விற்பனை ஆகிறது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை 71 ஆயிரத்து 840 ரூபாய்க்‍கு விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தங்கத்தின் விலை பவுனுக்‍கு 18 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்திருப்பதால் மந்தமாக இருப்பதாக நகைக்‍கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day