கடற்படைக்கு வலுசேர்க்கும் ரஃபேல்-எம் போர் விமானங்கள்... வியக்க வைக்கும் சிறப்புகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய கடற்படைக்கு 63 ஆயிரம் கோடி ரூபாயில் 26 ரஃபேல் எம் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் - இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் ஒப்பந்தத்தில் உள்ளது என்ன? விமானத்தின் சிறப்பம்சங்கள் என்ன? விரிவாக பார்க்கலாம்...

பிரான்ஸிடமிருந்து 26 ரபேல் எம் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதற்காக பிரான்ஸுடன் சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி 22 ஒற்றை இருக்கை ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் மற்றும் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களை இந்தியாவுக்கு தயாரித்து வழங்க இருக்கிறது பிரான்ஸ். 2030-31-ம் ஆண்டுக்​குள் ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து விமானங்களும் வழங்​கப்​படும் என்பது தான் ஒப்பந்தமே. விமானங்களை தயாரித்து வழங்குவது மட்டுமின்றி தளவாட உதவிகள், வீரர்களுக்கான பயிற்சி, பராமரிப்பு உள்ளிட்டவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

பராமரிப்பு பிரச்சினை காரணமாக இந்திய கடற்படையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் MIG 29 கே ரக போர் விமானங்கள் எதிர்பார்த்த செயல் திறனை வெளிப்படுத்தவில்லை என சொல்லப்படும் நிலையில் இதன் காரணமாகவே புதிதாக போர் விமானங்கள் வாங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த போர்க்கப்பல்களில் MIG 29 கே ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டவை. பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் விமானங்கள் வந்த உடன் இவை மாற்றப்படும் என சொல்லப்படுகிறது.

பிரான்சிடம் இருந்து இந்தியா ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியுள்ள நிலையில் அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இந்த ரஃபேல் எம். குறிப்பாக கடற்பகுதிகளில் போர் கப்பல்களில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ரஃபேல் எம் விமானங்கள். 

ரஃபேல் எம் போர் விமானத்தின் இறக்கைகளை மடக்க இயலாது. அவை 39.5அடி நீளத்துடனும் ஒரு ஏவுகணையை ஏந்திச்செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 2200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ரஃபேல் எம் ரக விமானம் ஆயிரம் கடல் மைல் தூரத்தில் இருக்கும் எதிரிகளையும் துல்லியமாக குறி வைத்து தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. அதிகபட்சமாக 50 ஆயிரம் அடி உயரத்திலும் பறக்கக்கூடிய திறன் பெற்றது தான் இந்த ரஃபேல் எம். போர் விமானம்.

6 ஆயிரத்து 668 லிட்டர் எரிபொருள் கொள்திறன் கொண்டதாகவும் இவை வடிமடைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இந்த 26 விமானங்களில் 10 விமானங்கள் வானில் பறந்தபடியே எரிபொருள் நிரப்பக்கூடிய வகையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

போர்க்கப்பல்களில் உள்ள குறைந்த தூர ஓடுதளத்தை பயன்படுத்தி தரையிறங்கும் வகையிலும் புறப்படும் வகையிலும் வடிவமைக்கப்படவுள்ளன. ஒரே கப்பலில் பல விமானங்களை நிறுத்தும் வகையில் சிறிய தொற்றம் கொண்டதாகவும் எடை குறைவானதாகவும் இருப்பதால் கடல்பாதுகாப்புக்கு ரஃபேல் எம் விமானங்களின் ஆற்றல் அதீத திறன் கொண்டதாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. 

அதுமட்டுமா.. மீடியோர் ஏவுகணை, SCALP குரூஸ் ஏவுகணை மற்றும் MICA ஏவுகணை என 3 ஏவுகணை அமைப்புகளை கொண்டுள்ளது. இதில் மிகமுக்கியமானதாக பார்க்கப்படுவது மீடியோர் ஏவுகணை அமைப்பு. விமானியால் எதிரி விமானங்களைக் கண்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், எதிரி விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது தான் மீடியோரின் சிறப்பு. தொலைதொடர்பு, பாதுகாப்பு என அனைத்தும் கருவிகளும் நவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்பது மேலும் சிறப்பு. 

ரஃபேல் எம் ரக போர் விமானங்கள் சுமார் 15.27 மீட்டர் நீளம் கொண்டது என கூறப்படும் நிலையில் 9 ஆயிரத்து 500 கிலோகிராம் எடையிலான குண்டுகளையும் வெடிமருந்துகளையும் சுமந்து செல்லக்கூடிய திறன் பெற்றது எனவும் கூறப்படுகிறது. 

இந்திய விமானப்படையில் ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தப் புதிய ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள மொத்த ரஃபேல் ஜெட் விமானங்களின் எண்ணிக்கையை 62 ஆக உயர்த்தும். இந்திய கடற்படைக்கும் வலுசேர்க்கும். இதுதவிர பிரான்ஸிட​மிருந்து 33,500 கோடி ரூபாயில் 3 எஸ்​கார்​பீன் ரக நீர்​மூழ்கி போர்க்​கப்பல்​களை வாங்​கு​ம் ஒப்​பந்​த​மும் இறுதி செய்​யப்​பட்டு வரு​வது குறிப்பிடத்தக்கது. 

Night
Day