இல.கணேசன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

கண்ணியமான பேச்சுக்கும், கணீர் தமிழுக்கும் சொந்தக்காரரான இல.கணேசன் புரட்சித்தலைவி அம்மாவுடன் நல்ல நட்புறவுடன் இருந்தவர் என்றும், பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றிய இல.கணேசன் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

மூத்த தலைவர் இல.கணேசனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கத்தின் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day