எழுத்தின் அளவு: அ+ அ- அ
தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு தரமான பள்ளி சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், வண்ணப் பென்சில்கள் உள்ளிட்டவற்றை விலையில்லாமல் வழங்கி அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தியது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு...
பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடை முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது... இதனால் ஏழை பணக்காரன் என்ற தாழ்வு மனப்பாண்மை நீங்கி, மாணவ- மாணவிகளிடையே ஒற்றுமை, சமத்துவம், ஒழுக்கம் போன்ற நற்பண்புகள் ஏற்பட்டு, அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது... ஆனால் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டத்தை நம்பியே பள்ளிக்கு வரும் எத்தனையோ ஏழை எளிய மாணவர்களுக்கு சீருடை வாங்குவது என்பது சுமையாகவே இருந்தது... இதனால் பள்ளி சீருடை என்ற பேரில் நைந்து போய் நிறம் மாறிய கிழிசல்களை அணிந்துக்கொண்டு, புத்தகங்களை கைகளால் அனைத்து பிடித்தப்படி, வெறுங்கால்களுடன் கல்வி நாடி பள்ளிக்கு வர வேண்டிய நிலையில் தள்ளப்பட்டிருந்தனர் ஏழை மாணவர்கள்..
மாணவர்களிடையே எதை களைய பள்ளி சீருடை கொண்டுவரப்பட்டதோ... அதே பள்ளி சீருடையை கந்தலும் கிழிசலுமாக ஏழை மாணவர்கள் அணிந்து வந்ததால், அரசு பள்ளிகளிலேயே மாணவர்கள் மத்தியில், பொருளாதாரம் சார்ந்த ஏற்றத்தாவு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.... இதற்கு தீர்வு காணவும், பெற்றோரின் சுமையை குறைக்கவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்கு தரமான பள்ளி சீருடைகள் வாழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு..
அதன்படி 2012-13-ம் கல்வியாண்டு முதல், தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் ஆகியவற்றில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, நான்கு இணை சீருடை வழங்க புரட்சித்தலைவி அம்மாவின் அரசு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் விலையில்லா ஒரு இணை காலணியும் வழங்கியது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு... இவற்றையும் தாண்டி, மாணவ, மாணவியர்களிடம் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் நல்லெண்ணத்துடன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப் பெட்டி அதாவது Geometry Box, கிராமப்புற மாணவ, மாணவியருக்கு அதுவரை கிடைக்கப் பெறாத வண்ணப் பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் என மாணவர்களின் கல்விக்கு தேவையான அத்தனையையும் விலையில்லாமல் வழங்கியது புரட்சித்தலைவி அம்மாவின் அரசு..
மாணவ, மாணவியர் நலன்களுக்காக புரட்சித்தலைவி அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்டு இந்த சலுகைகள் மூலம், அரசு பள்ளிகளில், குறிப்பாக கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, இடைநிற்றல் முழுவதுமாக தடுக்கப்பட்டது...
ஆனால் தற்போதை திமுக ஆட்சியில் மாணவர் சேர்க்கையே இல்லை என கூறி 207 அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தியிருக்கிறது இந்த விளம்பர திமுக அரசு.... அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டால்.. அப்பள்ளிகளின் உள்கட்டமைப்புகளையும் தரத்தையும் மேம்படுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்வதே அரசின் கடமையாக இருக்க... அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து போனதற்கு, குழந்தைகளின் பிறப்பு விகிதமே குறைந்து விட்டதே காரணம் என ஐ.நா சபையே வியக்கும் அளவுக்கான விளக்கத்தை கொடுத்தது இந்த விளம்பர திமுக அரசு...
டாஸ்மாக் கடைகளில் குறைந்தபட்சமாக 180 ML மதுபாட்டிலே விற்கப்படுவதால், மதுபிரியர்கள் கட்டிங் SHARING-காக.. மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் என்பதை, மாநிலம் முழுக்க உயர்மட்ட குழு அமைத்து சர்வே எடுத்து, அதை பலவித ஆய்வுக்கு உட்படுத்தி, பின் அதற்கான தீர்வாக 90 ML டெட்ரா பாக்கெட்டுகளை அறிமுகப்படுத்திய பெருமை மிகு... மாண்புமிகு திமுக அரசால், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியாமல் போனது தான் வெட்ககேடாக உள்ளது.
திமுக ஆட்சிபொறுப்பேற்றதில் இருந்தே பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சீருடையை முறையாக வழங்காமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன... இதனால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும் போது, அதே கந்தலான பழைய சீருடையை அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் ஆளாகி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது... 2024-25 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான சீருடை வழங்குவது ஒருமாத காலத்திற்கும் மேலாக தாமதமானதால், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் கலர் டிரெஸ் அணிந்து வரலாம் என பள்ளி நிர்வாகவே அணுமதி அளித்ததன் கொடுமைகள் அரங்கேறின... எதை அணிந்தால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும் என சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதோ அதன் நோக்கமே சிதைந்து போகும் அளவுக்கு மாணவர்கள் மீது அளவற்ற அக்கறை செலுத்தியது இந்த விளம்பர திமுக அரசு... இதில் நடப்பாண்டில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் பகுதியில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு, மூன்று மாதங்கள் ஆகியும் விலையில்லா சீருடை வழங்கப்படாததன் அவலமே நீடிக்கிறது...
புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் மாணவர்களின் உடல்நலன் சார்ந்து, பள்ளி சீருடைகள் தரமானதாக வழங்கப்பட்ட நிலையில் தற்போதைய திமுக ஆட்சியிலோ முற்றிலும் தாரமே இல்லாமல் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது... இதுமட்டுமே காலணி, புத்தக பை, ஏன் மாணவர்களுக்கான பாடபுத்தகங்களை கூட இந்த அரசு சரிவர வழங்காமல் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது... இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், குறித்த நேரத்தில் புத்தகங்கள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யவும், அரசு பள்ளி ஆசிரியர்களும் கல்வியாளர்களும் விளம்பர திமுக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் கூட, மாணவர்களின் கல்வியை ஒரு பொருட்டாகவே கருதாமல் வஞ்சித்து வருகிறது ஒந்த விளம்பர அரசு..
இப்படி திமுக ஆட்சியில் மாணவர்களின் கல்வி, அடித்தளமே ஆடிப்போய் தள்ளாட்டத்தில் இருந்துக்கொண்டிருக்க... அதையெல்லாம் சீர்படுத்துவதை விடுத்து... கல்விக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை என மத்திய அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்து, மாணவர்களின் கல்வியிலும், அற்ப அரசியல் சித்து விளையாட்டை அரங்கேற்றி வருகிறது திமுக.. இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் புறையோடிக்கொண்டிருக்கும் போதை வஸ்துக்களின் புழக்கத்தை தடுக்க திறாணியில்லாமல்... போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என இளைய சமுதாயத்துக்கு அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து தேங்காய்த் தூள் என கூறி மெத்தாஃபெட்டமைன் என்னும் உயர்ரக போதை வஸ்து தயாரிப்பதற்கான "சூடோபெட்ரின்" கடத்திய வழக்கில் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டதை நாடே அறியும்.. அப்படி இருக்கையில், திமுகவின் ஆட்சி அதிகாரத்தின் பேரால், தமிழகத்தில் கொடிகட்டி பறந்துக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்ஜியத்தால், மாணவர் சமுதாயமே சீழந்துக்கொண்டிருக்க... கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் தன்னை அப்பா என அன்போடு அழைப்பதாக, வெட்கமே இல்லாமல் தனக்கு தானே ஸ்டாலின் கூறி வருவது தமிழக மக்களிடையே கடுங்கோபத்துக்கு ஆளாகியுள்ளது.