சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு கைவிடவேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-


தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமல்படுத்தியுள்ள சுங்கக்கட்டண உயர்வால் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக அரசும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தி உள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தியுள்ள சுங்கக்கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். சாமானிய மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் இந்த சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசும் இதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரத்து 606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன- இவற்றுக்கு ஆண்டிற்கு இருமுறை அதாவது ஏப்ரல் 1ஆம் தேதியும், செப்டம்பர் 1ஆம் தேதியும் சுங்கக்கட்டண உயர்வை அமல்படுத்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவிகிதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது - அதேபோன்று தற்போது விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக புரட்சித் தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். கார், ஜீப் போன்றவை பயணிப்பதற்கான கட்டணத்தில் 5 ரூபாயும், மாதாந்திர கட்டணத்தில் 70 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது - அதேபோன்று பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 15 ரூபாயும், இரு முறை பயணிக்க 20 ரூபாயும், மாதாந்திர கட்டணத்தில் 395 ரூபாயும் உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சி காலத்தில் இதேபோன்று சுங்கக்கட்டண உயர்வு ஏற்பட்ட போது ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினரை அழைத்து பேசி கட்டண உயர்வை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உடனே சுங்கக்கட்டணம் குறைக்கப்பட்டது என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்து கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால் தமிழக மக்களின் துன்பங்களை எப்பொழுதும் வேடிக்கை பார்க்கும் திமுக தலைமையிலான அரசு என்ன செய்கிறது? திமுக அரசும் தங்கள் பங்கிற்கு மாநில நெடுஞ்சாலைகளில் புதிதாக சுங்கச்சாவடிகளை அமைத்து சாமானிய மக்களிடமிருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிவு எடுத்து இருக்கிறது - மேலும், இதில் வேதனையானது என்னவென்றால், மாநில நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து அதனை தனியாருக்கு தாரை வார்க்கவும் திமுக தலைமையிலான விளம்பர அரசு திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலை உயர்வை தாங்கிக் கொள்ள முடியாமல் ஏழை, எளிய சாமானிய மக்கள் மிகவும் துன்பப்பட்டு கொண்டு இருக்கின்றனர் - இந்நிலையில் தற்போது இந்த சுங்கக்கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய அபாயம் இருப்பதால், ஏழை, எளிய, சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் போன்ற அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்படைகின்ற சூழல் ஏற்படக்கூடும் என்பது மிகவும் கவலை அளிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் சாலைகளை சரிவர பராமரிப்பதில்லை என்று அனைவராலும் குற்றம்சாட்டப்படுகிறது - அதிலும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகள், வழிமுறைகள்படி கழிப்பறை, ஓய்வறை வாகன நிறுத்தம் உள்ளிட்ட எந்த வசதிகளும் பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது - மேலும், தமிழகத்தில் 32 சுங்கச்சாவடிகள் காலாவதியானதாக கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது - தற்போது காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை தடுக்காமல் திமுக தலைமையிலான விளம்பர அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக சாடியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுங்கக்கட்டண உயர்வை கட்டுப்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தது - இதற்காக எந்தவித நடவடிக்கையும் இந்த விளம்பர அரசு இதுவரை எடுக்கவில்லை என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே சொத்துவரி உயர்வு, ஆவின் பொருட்களின் விலையேற்றம், வரலாறு காணாத வகையில் மின் கட்டண உயர்வு, கட்டுமான பொருட்கள், விவசாயம் சார்ந்த பொருட்களின் விலை உயர்வுகளால் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து தவிக்கும் நிலையில், இந்த சுங்கக்கட்டண உயர்வு அனைவருக்கும் கூடுதல் சுமையளிப்பதாக அமைந்துவிடும் - அதேபோன்று, தமிழகத்தில் தனியார் பேருந்துகள் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தனது இஷ்டத்திற்கு பேருந்து கட்டணத்தை மக்களிடம் வசூல் செய்து வரும் நிலையில் தற்பொழுது அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுங்கக்கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள சாலைகள் பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், தன்னிறைவு எட்டிய சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைளை விரைந்து எடுத்திட வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், விரைவில் வீட்டுக்கு போக தயாராக இருக்கும் திமுக தலைமையிலான அரசு எந்தவித மக்கள் நல நடவடிக்கைகளையும் என்றைக்கும் எடுக்கப்போவதில்லை என்றும், இதற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day