ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமலாக உள்ளது.

மே 1-ம் தேதி முதல் பணம் சார்ந்த நிறைய மாற்றங்கள் வங்கிகள் மற்றும் ரயில்வேத்துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏடிஎம்மைப் பொறுத்தவரை பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 பரிவர்த்தனைகள் மட்டுமே இலவசம்.  மற்ற நகரங்களில் 5 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ள அனுமதி. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய் வரி செலுத்த வேண்டும். அதேபோல் இருப்பைச் சரிபார்த்தால், அதற்கும் 7 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகளைப் பொறுத்தவரை காத்திருப்பு டிக்கெட்டுகள் இனிமேல் பொதுப் பெட்டிகளில் மட்டுமே செல்லுபடியாகும்.  முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாகக் குறைக்கப்படுகிறது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விலைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றி அமைக்கப்படும் என்பதால் நாளை விலை மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ரெப்போ விகிதக் குறைப்புகளின் காரணமாக, வங்கிகள் நிலையான வைப்புத்தொகை மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்ற உள்ளன.  

ரிசர்வ் வங்கி, மாநிலத்தின் அனைத்து உள்ளூர் வங்கிகளையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய வங்கியை உருவாக்க உள்ளது. அதன்படி 11 மாநிலங்களில் கிராமப்புற வங்கிகள் பெரிய வங்கிகளாக மாற்றப்படுகின்றன.

Night
Day