ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாமியார்பட்டியை சேர்ந்த 60 வயதான கருப்பையா என்பவர், திருவேகம்பத்தூர் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சடலத்தை கைப்பற்றி கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 27ம் தேதி சாமியார் பட்டியில் நடந்த திமுக நிர்வாகி பிரவீன் குமார் கொலை வழக்கில் கைதான கனகராஜ் என்பவரின் தந்தை கருப்பையாவை தான் கொலையாளிகள் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த இளையராஜா, தர்மராஜா, மகாராஜா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Night
Day