ராகுல் கருத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராணுவ வீரர்கள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச வேண்டுமே தவிர, அதனை விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என்று ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ  யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களால்  இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதாகவும்  2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனடிப்படையில் ராகுல் காந்தி  ராணுவ வீரர்களை அவதூறாக பேசியதாகக் கூறி ஓய்வு பெற்ற எல்லை சாலைகள் அமைப்பின் அலுவலர் லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட லக்னோ நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கும் சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டாயிரம் சதுரகிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கையகப்படுத்தியது உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் அங்கிருந்தீர்களா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி தரப்பு உண்மையான இந்தியர், ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டதாக கூறுவார்கள் என்று பதிலளித்தது. அப்போது ராணுவ வீரர்கள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால் அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும் அதனை விடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டித்தது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், ராகுல் காந்தி மனு மீது பதிலளிக்குமாறு உத்தரபிரதேச மாநில அரசுக்கும்  புகார்தாரருக்கும்  உத்தரவிட்டது.

Night
Day