+1 மாணவர் உயிரிழப்பு - உறவினர்கள் ரயில் மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

 திருப்பத்தூரில் பள்ளி மாணவனின் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் முகிலன், திருப்பத்தூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் கடந்த ஒன்றாம் தேதி மாணவன் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தனிப்படை போலீசார் மாணவனை தேடி வந்த நிலையில், அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் இருந்து மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் - மகன் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றம் உறவினர்கள் 2வது நாளாக அரசு மருத்துவமனை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து, திருப்பத்தூர் ரியில் நிலையம் வந்த மாணவனின் உறவினர்கள் ராஜ்கோட்டில் இருந்து கோயம்புத்தூர் வரை சென்ற விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day