எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 6-வது நாளாக தொடர்ந்து அத்துமீறி தாக்‍குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்‍கில் நடந்த பயங்கரவாத தாக்‍குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் ‍கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலையடுத்து காஷ்மீர் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். எல்லைப்பகுதிகளான நவ்சேரா, சுந்தர்பானி, அக்‍னுர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 6-வது நாளாக அத்துமீறி நள்ளிரவு முதல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு உடனடியாக கடுமையான பதிலடி தரப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. பாரமுல்லா, குப்வாரா மாவட்டங்களில் உள்ள எல்லைகளிலும் சர்வதேச எல்லைப்பகுதியான பர்கவால் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்‍குதல் நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

Night
Day