கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி உள்ளதாக கூறி கைக்குழந்தையுடன் குடும்பத்தினரை வீட்டிற்குள் வைத்து அறநிலைய துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கூத்தப்பன்குடிக்காடு பகுதியில் சுயம்புராஜ் என்பவர் அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தை சில அடிகள் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அறநிலையத் துறைக்கு வரி செலுத்த சுயம்புராஜ் பலமுறை அணுகியும் வரி வாங்காமல் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில், அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி இருப்பதாக கூறி கை குழந்தையுடன் குடும்ப உறுப்பினர்களை உள்ளே வைத்து வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளர். மேலும், சுயம்புராஜ் வீட்டுக்கு செல்லும் பாதையையும் கம்பி வேலி போட்டு அறநிலையத் துறை அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதனால், குழந்தைக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.