கார் டயர் வெடித்து விபத்து - 4 பேர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சொகுசு காரின் டயர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி விழுப்புரம் மாவட்ட அயுதப்படை காவலர் மாதவன் என்பவர் தனது குடும்பத்துடன் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அத்திப்பாக்கம் அருகே கார் சென்றபோது, காரின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், நிலைதடுமாறி கார் பள்ளத்தில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஆயுதப்படை போலீசார் மாதவன் உட்பட 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day