23 வயது கபடி வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு - மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாரடைப்பால் மயங்கி விழுந்த கபடி வீரர் உயிரிழந்துள்ளார்.
 
திருமுருகன்பூண்டி விஜிவி கார்டன் பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்பவர் பெரியாயிபாளையத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல் பணி முடித்து வீடு திரும்ப தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது மயங்கி விழுந்துள்ளார். அங்கு இருந்தவர்கள் சத்தம் கேட்டு மயங்கி கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், நவீன் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

Night
Day