ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி - இந்தியா சாம்பியன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை இந்திய அணி 4வது முறையாக கைப்பற்றி அசத்தியது.

பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் கடந்த 20ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இந்தியா, தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட 8 நாடுகள் இரு பிரிவுகளாக இதில் பங்கேற்றன. லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளை தொடர்ந்து இந்தியாவும், நடப்பு சாம்பியனான தென்கொரியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே நடைபெற்ற இறுதிப் போட்டியில், துவக்கத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்த இந்திய அணி, முதல் பாதி முடிவில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2வது பாதியிலும் இந்திய அணி 2 கோல்கள் அடிக்க, கொரியா ஒரு கோல் மட்டும் அடித்து ஆறுதல் பெற்றது.

முடிவில் இந்திய அணி 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்திய அணியில் தில்பிரீத் சிங் 2 கோல்களும், சுக்ஜீத் சிங், அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 4வது முறையாக ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கும் தகுதி பெற்றது. 

Night
Day